நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் பீஸ்ட். இந்த படம் அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே இந்த படத்தின் பாடல்கள் அனைவரையும் கவர்ந்து ஹிட் ஆகியது. அதிலும் குறிப்பாக அரபிக் குத்து பாடல் தாளம்போட வைத்து உலகளவில் அனைவரின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகியது.
அரபிக் குத்து வீடியோ பாடலை படக்குழு அண்மையில் வெளியிட்டது. இந்த நிலையில் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் மற்றும் ஜோனிட்டா காந்தி இரண்டு பேரும் இணைந்து பாடியிருந்த அரபிக் குத்து வீடியோ பாடல் யூடியூபில் 250 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இதை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர்.
#ArabicKuthu – The Unstoppable, the video song hits 250 Million+ views 🔥 https://t.co/d4NyDWMbP2@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @jonitamusic @selvaraghavan @manojdft @AlwaysJani @Nirmalcuts @KiranDrk #Beast pic.twitter.com/WCYEPuqGbm
— Sun Pictures (@sunpictures) September 2, 2022