அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறுவதை வரவேற்கின்றோம் என தெரிவித்துள்ளார்
சென்னை ஆவடி ஜே.பி எஸ்டேட் அருகே ஒரு கோடி ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதனை தமிழ் வளர்ச்சித் துறையின் அமைச்சரான மாஃபா பாண்டியராஜன் ஆய்வு செய்ய சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாஃபா பாண்டியராஜன் ஆளுநரை சந்தித்து 5 அமைச்சர்கள் பேசி நல்ல முடிவே வரும் என்று கூறியிருக்கும் நிலையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்காக திமுக அதிமுகவுடன் இணைந்து போராடுவதற்கு தயாராக இருப்பதாகக் கூறுவது தேவையற்ற ஒன்று. ஸ்டாலின் அவர்கள் போராடுவதற்கு ஏராளமான பிரச்சினைகள் உள்ளது. அவற்றிற்காக அவர் போராடட்டும். விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் எனக் கூறியுள்ளார்.