Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் ‘கத்தி’ பட பாடல் செய்த டக்கரான சாதனை… கொண்டாடும் ரசிகர்கள்…!!!

கத்தி படத்தில் விஜய் பாடிய செல்பி புள்ள பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கத்தி . ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்த இந்த படத்தில் சமந்தா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். விவசாயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

Stream Kaththi - Selfie Pulla Remix by Vijay Rambo Maxim | Listen online  for free on SoundCloud

இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது . மேலும் இந்த படத்தில் விஜய் பாடிய செல்பி புள்ள பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது. இந்நிலையில் செல்பி புள்ள பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. இதனை தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

Categories

Tech |