தளபதி 65 படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை கலை இயக்குனர் கிரன் வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்யின் 65வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது தளபதி65 படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் தளபதி 65 படப்பிடிப்பில் இயக்குனர் நெல்சன் மற்றும் நடிகர் விஜய் இருக்கும் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தளபதி 65 படத்தின் கலை இயக்குனர் கிரண் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.