Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் ‘தளபதி 65’ படப்பிடிப்பில் திடீர் சிக்கல்… அதிருப்தியில் படக்குழுவினர்…!!!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்யின் 65வது திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த சில நாட்களாக தளபதி 65 படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் நெல்சன் திலீப்குமார், விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.

Thalapathy 65' pooja held, Kavin of 'Bigg Boss' part of project - The Hindu

மேலும் அவ்வப்போது படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் ஜார்ஜியாவில் குளிரான தட்பவெப்பம் மற்றும் அவ்வப்போது மழை பெய்து வருவதால் தளபதி 65 படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை. தினமும் ஒரு சில காட்சிகள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெறுகிறது . இதனால் படக்குழுவினர் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் ஜார்ஜியாவில் படமாக்கப்பட வேண்டிய காட்சிகளை முடித்த பிறகே படக்குழுவினர் சென்னை திரும்புவார்கள் என கூறப்படுகிறது.

Categories

Tech |