Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் ‘தளபதி 66’ படத்தை இயக்கப்போவது இவர் தானா?… லோகேஷ் கனகராஜ் கிடையாதா?… தீயாய் பரவும் தகவல்…!!!

நடிகர் விஜய்யின் தளபதி 66 படத்தை இயக்கவுள்ள இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார்.

Why is Vijay called Thalapathy? - Movies News

இதை தொடர்ந்து தளபதி 66 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி தளபதி 66 படத்தை இயக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. மேலும் இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கப் போகிறார் எனவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |