Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் தளபதி 66… வெளியான ஸ்வாரசியமான தகவல்…. உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!!!!

இளைய தளபதி விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகும் தளபதி 66 படத்தில் நடித்து வருகின்றார். யாரும் எதிர்பார்க்காத விதமாக நடிகர் விஜய் இயக்குனர் வம்சி உடன் கூட்டணி அமைத்துள்ளார். நெல்சனின்  பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் கமிட்டான இந்த படத்தின் அறிவிப்பு கடந்த வருடம்  வெளியாகி உள்ளது. ஆனால் அதன்பிறகு எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. இந்த நிலையில் கடந்த மாதம் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. ராஷ்மிகா இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதன் முதலாக நடித்து இருக்கின்றார்.

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ் போன்றோரும் நடிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து இந்த படம் வழக்கமான கமர்சியல் படமாக இருக்காது எனவும் சற்று மாறுபட்ட கதை களத்தில் அதே சமயம் அனைத்துவிதமான ரசிகர்களும் ரசிக்கும்படி படம் இருக்கும் எனவும் தகவல்கள் வந்திருக்கின்றது. மேலும் இந்த படத்தின் இசையமைப்பாளர் தமன் மற்றும் நடிகர் சரத்குமார் ஆகிய இருவரும் இந்த படத்தின் கதையை பற்றி சமீபத்தில் பேசி இருந்தனர். இப்படி  தளபதி 66 படத்தை பற்றி பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகி வருகிறது. அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்ச கட்டத்தில்  இருக்கின்றது.

இந்த நிலையில் தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடித்து விட்டு அடுத்த வருடம் பொங்கலுக்கு தளபதி 66 திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இதை அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்த நிலையில் தற்போது இந்த படத்தை பற்றிய மேலும் ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது விஜய்யின் படத்தை USA உரிமையை பெற்ற AHIMSA என்ற அதே நிறுவனம் தான் தற்போது தளபதி 66 திரைப்படத்தின் உரிமையும் வாங்கி இருக்கின்றது.

பீஸ்ட் படத்தை விநியோகம் செய்ததது  இந்த நிறுவனம் தான்.  இந்த நிலையில்  தளபதி 66 படத்தையும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் என்று ஆர்வமாக வாங்கி இருக்கின்றது. என்னதான் பீஸ்ட் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் அதில் எந்தவிதமான குறைவும் இல்லை. USA போன்ற அயல்நாடுகளில் விஜய் படங்களில் அதிகம் வசூல் செய்த படம் பீஸ்ட் தான். அதன் காரணமாகவே விஜய்யின் அடுத்த படமான தளபதி 66 படத்தின் விநியோக உரிமையை AHIMSA நிறுவனம் வாங்கியிருக்கிறது.

Categories

Tech |