Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விஜய்யின் பனையூர் அலுவலகத்தில் இறந்து கிடந்த பெயிண்டர்”…. பரபரப்பாக பேசப்படும் செய்தி…!!!!

விஜய்யின் அலுவலகத்தில் இறந்து கிடந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவர் தன்னுடைய ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரை மாற்றி அமைத்து பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவரின் அலுவலகம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் உள்ளது. இங்கு விஜய் தன்னுடைய ரசிகர்கள் மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துவார். இதனால் இந்த அலுவலகம் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் இந்த அலுவலகத்தில் பெயிண்ட் அடிக்க வந்த நபர் ஒருவர் அலுவலகத்தில் இறந்து கிடந்திருக்கிறார். அந்த நபர் மது அருந்திவிட்டு வீட்டிற்கு செல்லாமல் விஜயின் அலுவலகத்திலேயே தங்கி இருந்த நிலையில் காலையில் வேலைக்கு வந்த மற்ற நபர்கள் அவர் சடலமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்தச் செய்தியானது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

 

Categories

Tech |