Categories
சினிமா செய்திகள் டிரெய்லர் தமிழ் சினிமா விமர்சனம்

விஜய்யின் “பீஸ்ட் ட்ரைலர்”…. “நெட்டிசன்ஸ் மரண கலாய்”… பதிலடி தரும் விஜய் ரசிகர்கள்…!!!!

விஜய்யின் பீஸ்ட் ட்ரைலர் வெளியாகி உள்ள நிலையில் பல நெகடிவ் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் சாக்கோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். நேற்று மாலை 6 மணியளவில் பீஸ்ட் படத்தின் ட்ரைலர் வெளியாகிய நிலையில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ட்ரெய்லரில் மாலில் சிக்கி தவிக்கும் மக்களை சோல்ஜர் ஆக உள்ள விஜய் தீவிரவாதிகளிடம் இருந்து அவர்களை காப்பாற்றுவது போல் இதில் நடித்துள்ளார்.

மேலும் ட்ரைலரில் விஜய் பேசிய வசனங்கள் அரசியல் சார்ந்ததாகவே இருந்தது. ஆனால் இதை பார்த்த நெட்டிசன்கள் பல காட்சிகள் ஏற்கனவே பார்த்த மாதிரி இருப்பதாகவும் கூர்கா படத்தில் இது போன்ற திரைக்கதை இருப்பதாகவும் கமெண்ட் அடித்து வருகின்றனர். இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் ட்ரைலரை வைத்து விமர்சனம் செய்யாதீர்கள் என பதிலடி கொடுத்து வருகின்றனர். பீஸ்ட் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |