Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் ‘பீஸ்ட்’ படப்பிடிப்புக்காக சென்னை கிளம்பிய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் வீடியோ…!!!

நடிகை பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தின் படப்பிடிப்புக்காக சென்னை கிளம்பியுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலிப்குமர் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார் . மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்தது. தற்போது  அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது .

https://twitter.com/PoojaHegdeFP/status/1410206356242505730

இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தின் படப்பிடிப்புக்காக சென்னைக்கு கிளம்பியுள்ளதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார் . மேலும் அவர் விமான நிலையத்தில் நடந்து வரும்  வீடியோவையும் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |