மாஸ்டர் திரைப்படம் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து இருக்கும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி பல்வேறு திரைப்படங்கள் வெளியிடப்படுவதை தடை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாஸ்டர் படம் எப்போது திரையரங்கில் வெளியாகும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் தளத்திற்கு மாஸ்டர் படத்தை டிஜிட்டல் ரைட்ஸ் பல கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர் படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடுவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் தெரிவித்துள்ளார். அதனால் விஜய் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.