நடிகர் விஜயின் மாஸ்டர் தெலுங்கு பட டீசரானது தற்போது வெளியிடப்பட்டதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். நடிகர்கள் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமன் மற்றும் அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இதற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் தமிழ் டீசர் தீபாவளியன்று வெளியானது. இதையடுத்து யூடியூப் தளத்தில் ‘மாஸ்டர்’ டீசர் வெளியான நாளிலிருந்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. தற்போது மாஸ்டர் படத்தின் தெலுங்கு டீசர் நாளை இன்று வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்த நிலையில் தற்போது வெளியாகியுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.