Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் ரோல்ஸ்ராய்ஸ் காரில் பயணித்த பீஸ்ட் படக்குழுவினர்…. வைரல்….!!!!

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்த படம் வருகின்ற 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பீஸ்ட் படத்தின் 3 பாடல்கள், டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, செல்வராகவன், அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இந்நிலையில் பீஸ்ட் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காரில் ‘பீஸ்ட்’ படக்குழுவினரை அழைத்துச் சென்றுள்ளார்.இயக்குனர் நெல்சன், மனோஜ், அபர்ணா தாஸ், பூஜா ஹெக்டே, சதீஷ் ஆகியோர் விஜய்யின் காரில் ஜாலியாக பயணம் செய்த காட்சிகள் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |