தனது காதல் குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா மனம் திறந்து பேசி உள்ளார்.
தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஜய் தேவரகொண்டா. இவர் கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி, டியர் கம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்று முன்னணி நடிகராக உயர்ந்திருக்கின்றார். தென்னிந்திய சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் கீதகோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பொழுது இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டதாக முதன்முதலில் கிசுகிசுக்கப்பட்டது.
இந்த நிலையில் ராஷ்மிகா படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் விஜய் தேவரகொண்டாவுடன் ஊர் சுற்றி வருகின்றார். அந்தப் புகைப்படங்களானது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதனால் இவர்கள் இருவரும் காதலிப்பதாக அடிக்கடிகள் வதந்திகள் வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராஸ்மிகா இதுகுறித்து விளக்கமளித்திருக்கின்றார். அவர் கூறியுள்ளதாவது, காதலில் இருந்தால் அதற்கு நிறைய நேரம் ஒதுக்க வேண்டும். அதேபோன்று காதலில் மிக மிக பொறுமை அவசியம் இல்லை. தற்போது அதற்கெல்லாம் நேரமே இல்லை. தற்போதைய சூழ்நிலையில் தன்னுடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் கூட என்னால் நேரம் ஒதுக்க முடியவில்லை. அதனால் எதிர்காலத்தில் காதல் வந்தால் கண்டிப்பாக சொல்கின்றேன் என கூறியிருக்கின்றார்.