விஜய் பற்றி கமல் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்த படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றார்கள். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் தயாரிக்கின்றது.
இந்த நிலையில் கமல் விஜய் பற்றி பேசிய பழைய வீடியோ தற்பொழுது இணையத்தில் வருகின்றது. நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற கமலிடம் விஜய் பற்றி கேட்கப்பட்டது. அப்பொழுது விஜய் நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவரை நான் வேறு விதமாக பார்க்க ஆசைப்படுகின்றேன். ரஜினி முள்ளும் மலரும் படத்தில் நடித்தது போல விஜய்யும் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. விஜய் நடிப்பிற்கு தீனி போடும் கதாபாத்திரங்கள் நடிக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன். ஒரு ரசிகனாக விஜய்யை அவ்வாறு பார்க்கவே ஆசைப்படுகின்றேன் எனக் கூறியுள்ளார். அவரின் இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.