Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய்யை போன்று அவரை வைத்தும் நான் ஒரு படம் பண்ண ஆசைப்பட்டேன்”…. சுந்தர்.சி ஓபன் டாக்….!!!!

தமிழ் திரையுலகில் டிரைக்டர், கதாநாயகன் என பயணித்துவரும் சுந்தர். சி, விஜய்யை வைத்து படம் இயக்கவேண்டும் என்று நீண்டகாலமாக ஆசைப்பட்டு வருகிறார். எனினும் விஜய் வைத்து படம் இயக்கவேண்டும் எனில், அவரிடத்தில் மொத்த கதையையும் சொன்னால் மட்டுமே அந்தப் படத்தில் நடிப்பதா..? வேண்டாமா..? என்று முடிவெடுப்பார். இதற்கிடையில் சுந்தர். சி, தான் எந்த நடிகரை வைத்து படம் பண்ணினாலும் ஒன்லைன் கதையை தான் கூறுவார்.

ஏனெனில் மொத்த கதையையும் அவரால் கோர்வையாக கூறமுடியாது. இதனாலேயே இதுவரையிலும் விஜய்யை வைத்து தான் படம் இயக்கவில்லை என அவரே முன்பு ஒரு மேடையில் கூறினார். இந்நிலையில் விஜய்யைப் போன்றே உதயநிதியை வைத்தும் தான் ஒரு படம் பண்ண ஆசைப்பட்டதாகவும், அந்த வாய்ப்பு நழுவி விட்டதாகவும் சென்னையில் நடைபெற்ற கலகத்தலைவன் படத்தின் இசை வெளியீட்டுவிழாவில் சுந்தர் சி கூறினார்.

அது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்த கலகத்தலைவன் படத்தில் நாயகனாக நடித்துள்ள உதயநிதியை வைத்து தீயா வேலை செய்யணும் குமாரு எனும் எனும் படத்தை இயக்குவதற்கு முயற்சி எடுத்தேன். எனினும் சில காரணங்களால் அந்த படத்தில் உதயநிதி நடிக்கவில்லை. இதன் காரணமாக சித்தார்த் நடித்தார். அந்த திரைப்படம் அப்போது சூப்பர் ஹிட் ஆனது என்று சுந்தர். சி கூறினார். இன்றைக்கு பல்வேறு இயக்குனர்களின் படத்தை வாங்கி, அதனை நம்பிக்கையோடு வெளியிட்டு வருகிறது உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என அந்த மேடையில் பேசினார்.

Categories

Tech |