நடிகர் விஷால் தமிழ்த் திரைப்பட நடிகராவார். நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜுன் இடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். தமிழ்த் திரைப்படங்களின் மூலமே பிரபலமானார். இவர் முதல் முதலாக நடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. விஷால் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியிலும் உள்ளார்.
இந்நிலையில் நடிகர் விஷால் விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேட்டியளித்த அவர், கடவுள் அருள் இருந்தால் நானும் ஒரு இயக்குநராக விஜய்யை வைத்து படம் இயக்குவேன். அதற்கான சூழ்ல்நிலை அமைவதற்காக காத்திருகிறேன். அதுதான் எனது நீண்ட நாள் ஆசை என கூறியுள்ளார்.