Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய்-அஜித் இணையும் படம்”…. இப்படித்தான் இருக்கும் என பிரபல இயக்குனர் பேச்சு…!!!!

விஜய் மற்றும் அஜித் இணையும் திரைப்படம் பற்றி இயக்குனர் வெங்கட் பேசியதற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

தமிழ் சினிமா உலகில் இரு முக்கிய உச்சமாக நடிகர்களாக வலம் வருகின்றார்கள் விஜய் மற்றும் அஜித். இணையத்தில் எப்பொழுதும் இருவரின் ரசிகர்களுக்கும் இடையே மோதல் இருப்பது வழக்கமான ஒன்று. இதனால் இவர்கள் இருவரும் படத்தில் இணைந்து நடித்தால்  இதற்க்கு ஒரு முடிவு கிடைக்கும் என சிலர் முயற்சித்து வருகின்றார்கள்.

அந்த வரிசையில் இயக்குனர் வெங்கட் பிரபுவும் ஒருவர். இவர் பல வருடங்களாக அஜித் மற்றும் விஜய்யை ஒரே படத்தில் சேர்ந்து நடிக்க வைக்க வேண்டும் என முயற்சித்து வருகின்றார். இந்த நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய பொழுது அவர் கூறியுள்ளதாவது, அஜித்தின் மங்காத படத்தில் வரும் விநாயக் மகாதேவ், விஜய் துப்பாக்கி திரைப்படத்தில் நடித்த ஜெகதீஷ் கதாபாத்திரத்தையும் இணைத்து ஒரு கதை பண்ண வேண்டும் என கூறியிருக்கின்றார். இதைக்கேட்ட ரசிகர்கள் உங்களின் ஆசை விரைவில் நிறைவேற வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

Categories

Tech |