நடிகர் அஜித்தின் பில்லா திரைப்படம் ரிலீசை அஜித் ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழகம் முழுவதிலும் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களை அதிகமாக உள்ளனர். இவர்களுக்கு மத்தியில் தல, தளபதி என்ற போட்டியில் அடிக்கடி நடக்கும். தமிழகம் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் ரசிகர்களை கவர்ந்தவர்கள் விஜய் மற்றும் அஜீத்.
இந்நிலையில் அஜித் நடிப்பில் 2007ஆம் ஆண்டு பில்லா திரைப்படம் வெளியாகியது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பில்லா திரைப்படம் நெல்லை ராம் சினிமாஸ் திரையரங்கில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்தின் ரிலீசை அஜித் ரசிகர்கள் மேளதாளங்களுடன் சிறப்பாக கொண்டாடினர். இதில் சிறப்பு என்னவென்றால் விஜய் ரசிகர்களும் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.