தமிழ் சினிமாவே கொண்டாடும் ஒரு நடிகராக வலம் வருபவர் இளைய தளபதி விஜய் . நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் அறிமுகமான விஜய் ஆரம்ப காலகட்டத்தில் பல கஷ்டங்களை தாண்டி இந்த நிலமைக்கு வந்துள்ளார். ஒவ்வொரு தோல்விக்கு பின் நிறைய அவமானங்கள் இருப்பதாக அவர் ஒரு மேடையில் பேசி இருப்பார். இதை தொடர்ந்து மெல்ல மெல்ல உயரத்திற்கு வந்த அவர் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக உயர்ந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் விஜய்க்கும் அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் பிரச்சினை என்றும் இருவரும் பேசிக் கொள்வதில்லை என்றும் செய்திகள் பரவி வந்தன.
மேலும் விஜய் தன் அம்மாவிடமும் தற்போது பேசுவதில்லை என்று வதந்தி பரவி வந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் என்ற பெயரில் ட்விட்டரில் புதிய கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அந்த ட்விட்டர் பக்கத்தில் ‘டுவிட்டரில் இணைவதில் மகிழ்ச்சி, எனது அன்பான மகனுடன் முதலீட்டை பதிவிடுகிறேன்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஷோபா சந்திரசேகர் டுவிட்டரில் கணக்கை தொடங்கவில்லை என்றும், இது போலியானது என்றும், இதனை யாரும் பின் தொடர வேண்டாம் என விஜய் ரசிகர்கள் பலரும் ட்விட் செய்துவருகின்றனர்.