Categories
மாநில செய்திகள்

“விஜய் ஆண்டனிக்கு டப் கொடுத்த ரியல் ஆசாமி”…. டிப்டாப் ஆசாமி வைரல் வீடியோ…!!!!!!!!

தமிழில் விஜய் ஆண்டனியின் நடிப்பின் மூலம் உருவான பிச்சைக்காரன் திரைப்படம் பெரிய ஹிட்டடித்தது. அந்த படத்தில் அம்மாவின் உயிரை காப்பாற்றுவதற்காக செல்வந்தராக இருந்த போதிலும் பிச்சைக்காரனாக வேஷம் போட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தார். யாருக்கும் தெரியாமல் பிச்சைக்காரன் வேஷம் போட்டு கோயில் வாசலில் பிச்சை எடுத்து அம்மாவுக்காக விரதம் இருக்கின்றார். பாக்ஸ் ஆபீஸ் ரீதியாக ஹிட்டடித்த இந்த படத்திற்கு கொடுத்திருக்கிறார் ஒரு ரியல் ஆசாமி. காலில்லாத பிச்சைக்காரனை போல் வேடம் அணிந்து இருக்கும் அந்த ஆசாமி வசூலை முடித்தபின் இயல்பான தோற்றத்திற்கு மாறுகிறார்.

இதற்காக ஸ்பெசலாக ஒரு இடத்தையும் வைத்துள்ளார். தினமும் அந்த இடத்திற்கு வந்து காஸ்டியூம் மாற்றிக்கொண்டு பிச்சை எடுக்க செல்லும் ஆசாமி கலெக்ஷன்  முடித்தவுடன் அந்த இடத்திற்கு வந்து தன்னுடைய வேஷத்தை  மாற்றிக் கொள்கிறார். அதன்பின் பைக்கில் வரும் நபர் அவரை அழைத்து கொண்டு செல்கின்றார். இந்த வீடியோவை நீங்கள் பார்த்தால் அதிர்ச்சி ஆகி விடுவீர்கள். வைரல் ஆகி இருக்கும் அந்த வீடியோவில் காலில்லாத நடக்க முடியாத ஒருவர் தவழ்ந்து கொண்டு வருகிறார். மறைமுகமாக இடத்திற்கு வந்தவுடன் சுற்றும் முற்றும் யாரேனும் இருக்கிறார்களா என பார்க்கின்றார்  யாரும் இல்லை என்பதை உறுதி செய்த உடன் தான் போட்டிருக்கும் பிச்சைக்காரனுக்கு ஆன காஸ்டியூம்  மாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து கால் இல்லாததை  மக்கள் நம்பவேண்டும் என்பதற்காக துணிகளை கட்டிக்கொண்டு கால்களை மடித்து கட்டி இருப்பதும் அப்போது தெரியும்.

முழுமையாக பிச்சைகாரன் காஸ்ட்யூமில் மாற்றியபின் சூப்பரான டிரஸ் ஒன்றை அணிந்து கொண்டு பைக்கில் வரும் நபரிடம் ஏறி  செல்கின்றார். இந்த வீடியோவை விஜய் ஆண்டனிக்கு டேக் செய்த நெட்டிசன் பிச்சைக்காரன் படத்தில் வரும் விஜய் ஆண்டனியின் ரியல்  இவர்தான் என கூறியுள்ளார். அந்த ஆடியோவில் பதில் அளித்திருக்கும் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் போல் வேஷம் போட்ட அந்த நபரை தான் பார்க்க விரும்புவதாக நகைச்சுவையாக கூறியுள்ளார்.

Categories

Tech |