Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் ஆண்டனியுடன் இணைந்த ரித்திகா சிங்… டைட்டில் என்ன தெரியுமா?…!!!

விஜய் ஆண்டனி, ரித்திகா சிங் இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர் ரித்திகா சிங். இதை தொடர்ந்து இவர் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா போன்ற படங்களில் நடித்திருந்தார். கடைசியாக ரித்திகா சிங், அசோக் செல்வனுடன் இணைந்து நடித்த ஓ மை கடவுளே திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ரித்திகா சிங் வணங்காமுடி, பாக்ஸர் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படத்தில் ரித்திகா சிங் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்திற்கு ‘கொலை’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இன்பினிட்டி பிலிம்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |