Categories
சினிமா

விஜய் ஆண்டனி நடிக்கும் கிரைம் திரில்லர் வகை படம்…. வெளியான போஸ்டர்…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி இப்போது கிரைம் திரில்லர் வகை படம் ஒன்றில் நடித்து இருக்கிறார். இப்படத்திற்கு “கொலை” என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை விடியும் முன் புகழ் இயக்குனர் பாலாஜிகுமார் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை இன்பினிட்டி மற்றும் லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்து இருக்கிறது. இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்து உள்ளார். அத்துடன் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளிசர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து இருக்கின்றனர்.

இந்தபடத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். கிரீஷ் கோபால கிருஷ்ணன் இசையமைத்துள்ளார். அண்மையில் வெளியாகிய இந்த படதின் முதல் பாடல் மற்றும் டிரைலர் ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிலையில் கொலை படத்தின் புது அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் 2வது பாடலான “பார்த்த நியாபகம்” நாளை 23-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று போஸ்டர் ஒன்றை பகிர்ந்து விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |