தமிழ் பட டைரக்டர் சி.எஸ்.அமுதன் இயக்கக்கூடிய “ரத்தம்” திரைப்படத்தில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்க ரம்யா நம்பீசன், மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா போன்ற 3 நாயகிகள் நடிக்கவுள்ளனர். இப்படத்திற்கு கண்ணன் நாராயணன் இசை அமைத்துள்ளார். அதேபோல் கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இத்திரைப்படத்தின் சூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் “ரத்தம்” பட டீசரில் முன்னணி டைரக்டர்கள் சிறப்புத் தோற்றத்தில் இடம்பெற்றுள்ளனர். அதாவது, டீசரில் சிறப்புத் தோற்றத்தில் டைரக்டர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித், வெங்கட்பிரபு போன்றோர் நடித்துள்ளனர். இப்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.