விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் கொலை திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், மழை பிடிக்காத மனிதன், ரத்தம் போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு காத்திருக்கின்றன. இதனையடுத்து இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் ”கொலை”. சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு செல்வா படத்தொகுப்பு செய்துள்ளார்.
இந்த படத்தில் கதாநாயகியாக ரித்திகா சிங் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் அர்ஜுன் சிதம்பரம், முரளி சர்மா, ராதிகா மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. தற்பொழுது படத்தின் படபிடிப்பு பணி நிறைவு பெற்று தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றது. இந்த நிலையில் படத்தின் போஸ்டர் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதில் லைலாவை கொன்றது யார் என்ற கேள்வியுடன் போஸ்டர் ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில் நாளை கேரக்டர் போஸ்டர் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.