விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள கொலை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
விடியும் முன் என்ற படத்தை இயக்கிய பாலாஜி கே குமார் இயக்கத்தில் சஸ்பென்ஸ் திரில்லர் கதை களத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் கொலை. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை இன்பினிடி பிலிம்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர் உடன் இணைந்து விஜய் ஆண்டனி தயாரித்து நடிக்கிறார். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்த சங்கர், அர்ஜுன் சிதம்பரம், கிஷோர் குமார் ஆகிய முக்கிய நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.