இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான விஜய் ஆண்டனி இப்போது கிரைம் திரில்லர் வகை படம் ஒன்றில் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்திற்கு “கொலை”என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த படத்தை “விடியும் முன்” புகழ் இயக்குனர் பாலாஜிகுமார் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை இன்பினிட்டி மற்றும் லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கிறது. விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகாசிங் நடித்து இருக்கிறார். மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உட்பட பலர் இப்படத்தில் நடித்து உள்ளனர்.
இப்படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கிரீஷ் கோபால கிருஷ்ணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அண்மையில் வெளியாகிய இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் அனைவரையும் கவர்ந்தது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் புது அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தின் முதல் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்பாடலை சித்ஸ்ரீராம் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
The 1st single from #KOLAI #கொலை #Neerkumizho sung by @sidsriram is releasing on 12th Aug @ 6.00 Pm.@DirBalajiKumar @ritika_offl @Meenakshiioffl @FvInfiniti @lotuspictures1 @bKamalBohra @dhananjayang @pradeepfab @siddshankar_ @DoneChannel1 @thinkmusicindia @CtcMediaboy pic.twitter.com/borAP3Bke4
— vijayantony (@vijayantony) August 10, 2022