நடிகர் விஜயின் சிவப்பு கார் குறித்து ஏற்பட்ட சர்ச்சைக்கு விஜய் தரப்பினர் தெளிவுபடுத்தியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் பிப்ரவரி 19-ல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது காலையில் நேரமாக சிவப்பு நிற காரில் வந்து நீலாங்கரையில் வாக்களித்தார். இவர் வந்த சிவப்பு காருக்கு இன்சூரன்ஸ் முடிந்துவிட்டது. இதனால் இவர் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் பெற வேண்டும் என சர்ச்சை கிளம்பியது. சமீபகாலமாகவே விஜய்யின் இந்த சிவப்பு காருக்கு இன்சூரன்ஸ் இல்லை என பேசப்பட்டு வந்தன.
இது பொய்யென நிரூபிக்கும் வகையில் விஜய்யின் தரப்பில் காருக்கான இன்சூரன்ஸ் பதிவை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். காரின் இன்சுரன்ஸானது 28/05/2022 வரை உள்ளது என நிரூபிக்கப் பட்டிருக்கிறது. இந்நிலையில் இது குறித்து வதந்தி கிளப்பியவர்களின் வாயை அடக்கினர் விஜய் தரப்பினர், அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.