Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விஜய் குறித்து தவறாக பேசிய மதுரை ஆதீனம்”… எச்சரித்து போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள்…!!!!

விஜய் குறித்து தவறாக பேசிய மதுரை ஆதீனத்திற்கு எதிராக ரசிகர்கள் போஸ்டரை ஒட்டியுள்ளனர்.

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் விஜய். இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அண்மையில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூல் அளவில் நல்ல வரவேற்பை பெற்றது.

Vijay fans

இந்த நிலையில் மதுரை ஆதினம் விஜய் இந்துக் கடவுள்களுக்கு எதிராக இருப்பதாகவும் அவரின் திரைப்படங்களை புறக்கணிக்க வேண்டுமென கூறியிருந்தார். சென்ற ஞாயிற்றுக்கிழமை மதுரையில் துறவியர் மாநாடு நடைபெற்றபோது பேசினார். அப்போது அவர் கூறியதாவது, நடிகர் விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் விநாயகக் கடவுளை கேலி செய்ததாகவும் அதனால் விஜய் நடித்த திரைப்படங்களை பார்க்க கூடாது என கூறியிருந்தார்.

அவர் இவ்வாறு பேசியது விஜய் ரசிகர்கள் மத்தியில் கோபம் அடைய செய்துள்ளது. அதனால் மதுரை ஆதீனத்துக்கு எதிராக விஜய் ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டி இருக்கின்றனர். அதில் அவர்கள் தெரிவித்ததாவது எச்சரிக்கை! மதுரை ஆதீன மடத்தின் சொத்துக்களை கொள்ளையடிக்க திட்டம் போடுறீங்களேயப்பா! நீங்களும் தளபதியை பற்றி பேசலாமா தப்பா?” பின் விளம்பரத்திற்காக பேசுவதை நிறுத்துங்கள். எங்களுக்கு ஜாதி மதம் எதுவும் இல்லை. தளபதி மேல் மக்கள் கொண்ட அளவுக்கு வானமே இல்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |