பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். இவர் சர்ச்சைக்கு பெயர் போனவர். அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு செய்தியை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி இணையவாசிகள் கோபத்திற்கு ஆளாகி வருகிறார். இந்நிலையில் மீராமிதுன் நடிகர் விஜய் சூர்யா மற்றும் அவருடைய ரசிகர்களுடன் மன்னிப்பு கேட்டு இணையத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தனக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு அப்சரா ரெட்டி என்பவர் தான் காரணம் என்றும், விஜய் மற்றும் சூர்யா தான் இதற்கு காரணம் என தவறாக தெரியப்படுத்தியதற்கு வருந்துவதாகவும், அவதூறாக பேசியதால் மன்னித்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
https://youtu.be/3Rh04gOfBBo