விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள கடைசி விவசாயி படத்தின் டிரைலர் நாளை வெளியாகவுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கடைசி விவசாயி. காக்காமுட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த மணிகண்டன் இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் நல்லாண்டி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
The offical trailer of #KadaisiVivasayi will be released from tomorrow 6:pm! #KadaisiVivasayiOfficalTrailer #TribalArtsProduction #DirManikandan @vsp_productions @Music_Santhosh@7CsPvtPte @iYogiBabu@Raichalrabecca @Aravindh_dir @_gbalaji @r_kumarshivaji@cineinnovations pic.twitter.com/GHbe02vXCk
— VijaySethupathi (@VijaySethuOffl) November 20, 2021
இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாரான நிலையில், கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் கடைசி விவசாயி படத்தின் புதிய டிரைலர் நாளை (நவம்பர் 21) மாலை 6 மணிக்கு ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது.