விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள லாபம், மாமனிதன், துக்ளக் தர்பார், கடைசி விவசாயி போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது இவர் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதன்படி பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று புதுச்சேரியில் தொடங்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு வாரம் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அத்துடன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் அடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.