திண்டுக்கல் மாவட்டம் பூ வியாபாரியின் மகனாக வலம் வருகிறார் விஜய் சேதுபதி. சேர்ந்தால் அரசாங்க பணியில் மட்டுமே சேர வேண்டும் எனக்கூறும் தனது தந்தையின் ஆசையை நிறைவேற்ற பல முயற்சிகளை மேற்கொள்கிறார் விஜய்சேதுபதி. இதற்கிடையில் கதாநாயகி அணு கீர்த்தியுடன் காதலில் விழுகிறார்.
இந்நிலையில் விஜய் சேதுபதியின் தங்கைக்கு திருமணம் நடைப்பெறுகிறது. அப்போது திருமணத்துக்காக திண்டுக்கல்லுக்கு விஜய் சேதுபதியின் நண்பர்கள் வருகின்றனர். திண்டுக்கல்லுக்கு வந்ததும் விஜய் சேதுபதியின் நண்பர்களுக்கும் வில்லன் ரவிக்கும் இடையில் மோதல் ஏற்படுகிறது.
இம்மோதலில் விஜய்சேதுபதி, வில்லன் ரவியை மார்க்கெட்டில் அனைவர் முன்னாடியும் அடிக்கிறார். இதன் காரணமாக விஜய் சேதுபதியை கொலை செய்தே தீருவேன் என ரவி முடிவெடுக்கிறார். இந்த சூழலில் தன் தங்கையின் திருமணத்தை கூட பார்க்க முடியாமல் மறைந்து வாழ்கிறார் விஜய் சேதுபதி.
அதன்பின் விஜய் சேதுபதி எப்படி டிஎஸ்பி ஆனார்?, டிஎஸ்பி ஆன பிறகு ரவிக்கும் விஜய் சேதுபதிக்கு இடையில் நடந்தது என்ன? என்பதே படத்தின் மீதி கதை ஆகும். எதார்த்தமான நடிப்பு மக்களை கவரும் உடல்மொழி என பக்கா கமெர்ஷியல் ஹீரோவாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் வாயிலாக நாயகியாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ள அணுகீர்த்தியின் நடிப்பு பெரியதாக இல்லை. இதற்கிடையில் எதிர்பார்ப்புக்குரிய டிரைக்டர்களில் ஒருவரான பொன்ராம் இந்த முறை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து உள்ளார். திரைக்கதை வேகமாக இருந்தாலும், சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சிறப்பம்சமில்லை.