விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துக்ளக் தர்பார். தீனதயாளன் இயக்கியுள்ள இந்த படத்தில் ராஷி கண்ணா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மஞ்சிமா மோகன், பார்த்திபன், கருணாகரன், காயத்ரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
#TughlaqDurbar Audio From 18th August 6PM 📣📣#TughlagDurbarAudio
A #GovindVasantha Musical 😊😊#MakkalSelvan @VijaySethuOffl @DDeenadayaln @Lalit_SevenScr @RaashiiKhanna_ @rparthiepan @SunTV @NetflixIndia @thinkmusicindia @proyuvraaj pic.twitter.com/ZlAA9Z1ECw
— Seven Screen Studio (@7screenstudio) August 16, 2021
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் துக்ளக் தர்பார் படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் வருகிற ஆகஸ்ட் 18-ஆம் தேதி மாலை 6 மணிக்கு இந்த படத்தின் பாடல்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.