Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’… அழகிய ரொமான்டிக் பாடல் வீடியோ இதோ…!!!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார் படத்தின் ‘காமி காமி’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது விக்ரம், விடுதலை, காத்துவாக்குல ரெண்டு காதல், காந்தி டாக்ஸ் உள்பட பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார், கடைசி விவசாயி, லாபம், மாமனிதன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதில் துக்ளக் தர்பார் படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் ராஷி கண்ணா, பார்த்திபன், மஞ்சிமா மோகன், காயத்ரி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் துக்ளக் தர்பார் படத்தில் இடம்பெற்ற ‘காமி காமி’ பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. தற்போது இந்த அழகிய ரொமாண்டிக் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Categories

Tech |