துக்ளக் தர்பார் படத்தில் இடம்பெற்ற அரசியல் கேடி பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது விடுதலை, விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள லாபம், அனபெல் சேதுபதி, துக்ளக் தர்பார், கடைசி விவசாயி, மாமனிதன் போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதில் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார் திரைப்படம் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த படத்தில் ராஷி கண்ணா, பார்த்திபன், மஞ்சிமா மோகன், காயத்ரி, சத்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்நிலையில் துக்ளக் தர்பார் படத்தில் இடம்பெற்ற ‘அரசியல் கேடி’ பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.