தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் ஹீரோவாக பிரவேசம் செய்தவர் விஜய் சேதுபதி.
அவருடைய 44-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரை பற்றிய ஒரு சுவாரசியமான தொகுப்பை விரிவாக காணலாம். நடிகராகும் முன்பு வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்திருக்கிறார் விஜய் சேதுபதி.
ஒரு கடையில் சேல்ஸ்மேனாக இருந்திருக்கிறார். ஃபாஸ்ட் ஃபுட் உணவகத்தில் கேஷியராக பணியாற்றினார். ஃபோன்பூத்தில் ஆபரேட்டராக இருந்திருக்கிறார்.
தனது 3 எதிர்காலம் கருதி துபாய்க்கு சென்றார்.இந்தியாவை விட துபாயில் இரண்டு மடங்கு அதிக சம்பளம் கிடைத்ததால் கணக்காளராக அங்கு வேலை செய்தார். துபாய்க்கு வேலைக்கு சென்ற இடத்தில் ஜெஸியை சந்தித்து காதலில் விழுந்தார் விஜய் சேதுபதி. 2003ம் ஆண்டு ஜெஸியை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள்.
கோலிவுட்டில் கஷ்டப்பட்ட விஜய் சேதுபதிக்கு தென்மேற்கு பருவக்காற்று படம் தான் கை கொடுத்தது.