விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன் படத்தின் புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாமனிதன். இயக்குனர் சீனு ராமசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் காயத்ரி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அனிகா, குருசோம சுந்தரம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்தது. ஆனால் சில காரணங்களால் மாமனிதன் திரைப்படம் இன்னும் ரிலீஸாகாமல் உள்ளது.
Second single from Maamanithan Releasing Tomorrow [ Friday 28 ] at 11.30 A.M. #YeRasa pic.twitter.com/CsDp8CyqJU
— Raja yuvan (@thisisysr) May 27, 2021
சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாடல் ரிலீஸ் தேதியை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதன்படி ‘ஏ ராசா’ என தொடங்கும் இந்த பாடல் (மே 28) நாளை வெளியாக உள்ளது. இந்த பாடலுக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது நடிகர் விஜய் சேதுபதி காத்துவாக்குல ரெண்டு காதல், யாதும் ஊரே யாவரும் கேளிர், லாபம் உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.