Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியின் “மாமனிதன்” திரைப்படத்திற்கு தங்கப்பதக்கம்…. ட்விட்டரில் பகிர்ந்த இயக்குனர்….!!!!!!

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் திரைப்படத்திற்கு டோக்கியோ திரைப்பட விழாவில் தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஜய் சேதுபதி. இவர் எந்த வேடத்தில் நடித்தாலும் திறமையை வெளிக்காட்டி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிடுவார். இந்நிலையில் தற்பொழுது சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக காயத்ரி நடித்திருக்கிறார். மேலும் படத்திற்கு இசைஞானி இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் சேர்ந்து இசையமைத்திருக்கின்றனர். இத்திரைப்படத்தின் டீசர் சென்ற வருடமே ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சில பிரச்சனை காரணமாக படம் வெளியாகாமல் இருந்தது. இதையடுத்து சென்ற ஜூன் 24ஆம் தேதி படம் ரிலீசானது.

இத்திரைப்படம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறாத நிலையில் ஆஹா ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் பலரின் பாராட்டுகளை பெற்றது. மேலும் திரையுலக பிரபலங்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் மாமனிதன் படத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்தார்கள். இந்த நிலையில் இத்திரைப்படத்தை இந்த வருடம் டோக்கியோ திரைப்பட விருதுகள் விழாவிற்கு படக்குழு அனுப்பிய நிலையில் தற்பொழுது மாமனிதன் படம் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. இதுகுறித்து இயக்குனர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இதனால் மாமனிதன் பட குழுவினருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றார்கள்.

 

Categories

Tech |