Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியுடன் நடிக்க தேதி இல்லை…. அதிரடியாய் இணைந்த பிரபல நடிகை…!!

துக்ளக் தர்பார் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க இருந்த அதிதி ராவ் விலகியதால் ராசி கண்ணா கதாநாயகியாக இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கும் லலித் குமார் தயாரிக்கும் படமான துக்ளக் தர்பார் என்னும் படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்து வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக   காற்றுவெளியிடை , செக்கச்சிவந்த வானம் போன்ற படங்களில் நடித்த நடிகை அதிதி ராவ் ஒப்பந்தம் செய்திருந்தனர். இவர் படத்தின் தொடக்கவிழா  பூஜையிலும்  கலந்து கொண்ட  நிலையில்  தற்போது ஊரடங்கு  தளர்வால் துக்ளக் தர்பார்  படப்பிடிப்பு  மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது  நடிகை அதிதி ராவ் துக்ளக் தர்பார் படத்திலிருந்து திடீரென விலகி விட்டதாகவும் இந்த கொரோனா ஊரடங்கால்  ஏற்பட்ட கால்ஷீட்  குளறுபடியால் தற்பொழுது வேறு ஒரு படத்தில் நடிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளதாகவும்  இதனால் விஜய் சேதுபதியுடன் நடிக்க தேதி ஒதுக்க முடியாமல் படத்திலிருந்து விலகிவிட்டதாக  கூறப்படுகின்றது.

எனவே அவருக்கு  பதிலாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க நடிகை ராஷி கண்ணாவை  தேர்ந்தெடுத்துள்ளனர்.  இவர் ஏற்கனவே சங்க தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.

Categories

Tech |