Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியுடன் பைக்கில் ஊர் சுற்றிய குக் வித் கோமாளி பிரபலம்… தீயாய் பரவும் புகைப்படம்…!!!

நடிகர் விஜய் சேதுபதியுடன் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் பைக்கில் செல்லும் புகைப்படம் வெளியாகியுள்ளது .

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளை வைத்துக்கொண்டு போட்டியாளர்கள் சமையல் செய்ய படாதபாடு படும் காட்சிகள் மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது . கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் அரை இறுதி சுற்று நடைபெற்றது. இதில் கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் ஆகிய மூன்று பேர் இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். விரைவில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வரப்போகிறது என்பதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கும் கோமாளிகளும் பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது . அதன்படி இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த புகழ் சந்தானம், அருண் விஜய், விஜய் சேதுபதி ஆகியோரின் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் படப்பிடிப்பில் விஜய் சேதுபதியுடன் புகழ் பைக்கில் செல்லும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது .

Categories

Tech |