Categories
சினிமா

விஜய் சேதுபதி குடும்பம்… வைரலாகும் ஆபாச விமர்சனங்கள்… ரசிகர்கள் கொந்தளிப்பு… ஆதரவாளர்கள் ஆவேசம்…!!!

விஜய் சேதுபதியின் குடும்பத்தை பற்றி சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கும் ஆபாச விமர்சனங்களால் அவரின் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் நேற்று நடிகர் விஜய் சேதுபதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அவரின் தாயார் மறைவுக்கு ஆறுதல் கூறினார். அதன் பிறகு 800 திரைப்படம் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “நன்றி, வணக்கம்” எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தம், இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று பதிலளித்தார். இதற்கு முன்னதாக 800 திரைப்பட விவகாரத்தில் நடிகர் விஜய் சேதுபதி மீது கடும் கண்டனங்கள் எழுந்தன. அதன்பிறகு முத்தையா முரளிதரனின் வேண்டுகோளுக்கு ஏற்ப படத்தில் இருந்துதான் விலகுவதாக விஜய் சேதுபதி அறிவித்தார்.

இந்த நிலையில் விஜய் சேதுபதியின் குடும்பத்தை குறிவைத்து சமூக வலைத்தளங்களில் ஆபாச விமர்சனங்கள் உலாவி வருவதாகவும், அதனை பரப்பியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி குடும்பத்தை பற்றி சமூக வலைத்தளங்களில் உலவும் ஆபாச விமர்சனங்களால், அவரின் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரும் கடும் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

Categories

Tech |