விஜய் சேதுபதி நடிக்கும் 46வது படத்தை டிரைக்டர் பொன்ராம் இயக்குகிறார். “டிஎஸ்பி” என பெயரிடப்பட்டு இருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரி கெட்டப்பில் நடிக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்து இருக்கிறார். அத்துடன் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி உட்பட பல பேர் நடித்து உள்ளனர். இந்த திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
அண்மையில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்த நிலையில் இப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டு உள்ளது. “நல்லா இரும்மா” எனும் இந்த பாடலை விஜய் முத்துபாண்டி எழுதி இருக்கிறார். உதித்நாராயணன், செந்தில் கணேஷ், மாளவிகா சுந்தர் போன்றோர் பாடியுள்ளனர். இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். தற்போது இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Happy to release #NallaIrumaa from @VijaySethuOffl's #DSP!https://t.co/4vOJ88XodN
Best wishes team @immancomposer @vijaiMuthupand1 @ponramVVS @kaarthekeyens @karthiksubbaraj @kalyanshankar @anukreethy_vas @stonebenchers @vivekharshan @Venkatesh7888 @dineshkrishnanb @veerasamar
— Anirudh Ravichander (@anirudhofficial) November 16, 2022