Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

விஜய் சேதுபதி நடிப்பில் “மாமனிதன்”…. புதிய ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு…!!!!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஜய் சேதுபதி. இவர் தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் சேர்ந்து இசையமைத்திருக்கின்றனர். மேலும் யுவன் சங்கர் ராஜா இத்திரைப்படத்தை தயாரிக்கின்றார்.

இப்படத்தில் கதாநாயகியாக காயத்ரி நடிக்க முக்கிய வேடத்தில் குருசோமசுந்தரம் நடித்திருக்கின்றார். அண்மையில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் முதலில் மே 6ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து ஜூன் 24ஆம் தேதி ரிலீஸாகும் என மாற்றப்பட்ட நிலையில் தற்போது ஜூன் 23ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

Categories

Tech |