விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடிக்கும் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரினா கைப்உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படம் மேரி கிறிஸ்துமஸ். இத்திரைப்படத்தில் ராதிகா சரத்குமார், சஞ்சய் கம்பூர், தினு ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றார்கள்.
இத்திரைப்படம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் அன்று வெளியாக இருந்த நிலையில் தற்போது அடுத்த வருடம் வெளியாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. தற்போது டைகர் ஷெரிப் மற்றும் ரன்வீர் சிங் திரைப்படங்கள் வெளியாக இருப்பதால் விஜய் சேதுபதியின் திரைப்படம் தள்ளி போகின்றது. மேலும் படத்தின் தொழில்நுட்ப பணிகள் முடியாததால் திட்டமிட்ட தேதியில் படம் வெளியாகாமல் அடுத்த வருடத்திற்கு ரிலீஸ் செய்யவதாக படக்குழு அறிவித்திருக்கின்றது.