Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த கௌதம் மேனன்… மிரட்டலான அறிவிப்பு…!!!

விஜய் சேதுபதி நடிக்கும் மைக்கேல் படத்தில் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது விடுதலை, விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல், காந்தி டாக்ஸ் போன்ற பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் ‘மைக்கேல்’ படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மைக்கேல் படத்தில் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அவர் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |