Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விஜய் சேதுபதி பட நடிகை கைது”… தெலுங்கு திரையுலகில் பரபரப்பு….!!!!

தெலுங்கு நடிகை நிஹாரிகா நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னணி நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில் 2018 ஆம் வருடம் வெளியான ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் நிஹாரிகா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மூத்த தம்பி நாகா பாபுவின் மகள் ஆவார். இவர் தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி வெப் தொடரில் நடித்து அதன் பிறகு நடிகை ஆனார்.

இந்நிலையில் நேற்று இவர் ஹைதராபாத்தில் நடைபெற்ற பார்ட்டி ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அங்கு போதைப் பொருட்கள் கைப்பற்றப் பட்டதால் அங்கிருந்த அனைவரையும் கைது செய்ய நேர்ந்தது. அப்போது நடிகை நிஹாரிகாவும் அங்கு இருந்ததால் அவரும் கைது செய்யப்பட்டார். காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, இவர் விசாரணைக்கு பின் விடுதலை செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்ட நிகழ்வு தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |