Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் புதுச்சேரியில் படுகொலை…!!!

விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில் பல்வேறு ரசிகர் மன்றங்களும் மாவட்ட அளவில் செயல்பட்டு வருகின்றன. புதுச்சேரியில் விஜய்சேதுபதி ரசிகர் மன்றத்தின் தலைவராக இருந்தவர் மணிகண்டன்.இவர், நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது 3 பேர் கொண்ட மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தகவலறிந்த போலீசார் மணிகண்டனை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் ரசிகர் மன்ற தலைவர் பதவியை யார் ஏற்பது? என்ற போட்டி மணிகண்டனுக்கு அவரது உறவினரான ராஜ்குமாருக்கும் இடையே  ஏற்பட்டது.கடைசியில் மணிகண்டன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார் கூட்டாளிகளுடன் இணைந்து மணிகண்டனை  கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. கொலை சம்பவத்தில் ஈடுபட்டோரை  போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்

Categories

Tech |