Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய் சேதுபதி வழியை பின்பற்றும் சில நடிகர்கள்”….. உங்களுக்காக ஒரு பார்வை…!!!

தமிழ் சினிமாவுலகில் ஹீரோவாக நடித்த நடிகர்கள் தற்பொழுது வில்லனாக நடிக்கின்றார்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விஜய் சேதுபதி வலம் வருகின்றார். இவர் ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லன், குணச்சித்திர நடிகர் என எல்லாவற்றிலும் நடித்து வருகிறார். இதனால் இவரின் கைவசம் படங்கள் இருந்துகொண்டே இருக்கின்றன. இந்த வரிசையில் இவரைப் போல் சில ஹீரோக்களும் வில்லனாக நடித்து வருகின்றனர். அவர்களைப் பற்றி ஒரு சிறிய பார்வை.

விக்ராந்த்: இவர் பல திரைப்படங்களில் நடித்து வந்தாலும் பெரிதாக பிரபலமாகவில்லை. இதனால் உதயநிதி ஸ்டாலினின் கெத்து திரைப்படத்தில் வில்லனாக நடித்தார். தற்பொழுது பல படங்களில் கேரக்டர் ரோல் செய்து வருகின்றார்.

சக்தி வாசு: இவர் இயக்குனர் வாசுதேவனின் மகனாவார். இவர் சில திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். பெரிதும் பிரபலமாகாததால் வில்லனாக நடித்தார். ஆனால்  இதுவும் இவருக்கு சரிப்பட்டு வரவில்லை.

ஜெய்: இவர் சென்னை 28 திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். பலப்படங்களில் ஒருசில படங்கள்தான் பிரபலமானது. பிறகு இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் பெரிதாக மார்க்கெட் இல்லை. இடையில் இவருக்கு ஏற்பட்ட சில பிரச்சனைகளால் நடிக்கவில்லை. தற்பொழுது வில்லனாக நடிக்க ஒரு திரைப்படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

அதர்வா: பிரபல நடிகரான முரளியின் மகன் அதர்வா. இவர் பல வெற்றிப் படங்களை தந்து முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருந்தார். இடையில் அடுத்தடுத்து படங்கள் தோல்வியில் முடிந்ததால் பட வாய்ப்புகள் குறைந்தன. இவர் வில்லனாக நடித்தால் மார்க்கெட் போய் விடுமோ என கருதி வில்லனாக நடிக்காமல் இருக்கின்றார். பிரபல நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதியே வில்லனாக நடிக்கும் பொழுது இவர் நடிக்கலாம் என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |