Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய் சேதுபதி வில்லனாக 2 படங்களில் நடிக்க இருப்பதாக வெளியான தகவல்”…. விளக்கம்….!!!!!

ஜவான், புஷ்பா உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக வெளியான செய்தி பற்றி விஜய் சேதுபதி விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. இவர் ஹீரோவாக மட்டுமின்றி குணசத்திர கராபாத்திரம், வில்லன் என அனைத்து விதமான கதாபாத்திரங்களையும் ஏற்று சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவதால், விஜய் சேதுபதிக்கு ஏராளமான ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றனர். இவர் அண்மையில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருப்பார்.

இந்த நிலையில் ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்திலும் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 திரைப்படத்திலும் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாக செய்தி வெளியானது. தற்பொழுது இது குறித்து விஜய் சேதுபதி தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கின்றது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, ஜவான் படத்தில் மட்டுமே விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கின்றார். மற்றபடி தெலுங்கு படங்கள் உள்பட எந்த திரைப்படத்திலும் அவர் இதுவரை நெகட்டிவ் ரோலில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |